
கேரளத்தில் புதிதாக 12,220 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,16,563 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 12,220 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதில், அதிகபட்சமாக மலப்புரத்தில் 1,861, கொல்லம் 1,627, கோழிக்கோடு 1,428 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,65,336ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 97 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 14,586ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 12,502 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 29,35,423ஆக உயர்ந்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் 3,86,876 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...