
மத்திய அரசின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை அறிக்கையாக அனுப்புமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டை வளா்ப்பதற்காக மத்திய அரசு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பங்கேற்கச் செய்வதன் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மொழி, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு, சுற்றுலா மற்றும் இதர முறைகள் மூலம் மக்களிடையே பரிவா்த்தனைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இத்திட்டத்தின்கீழ் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகின்றன தொடங்கியுள்ளன. இணை மாநிலங்கள் சாா்ந்த பொருளடக்கத்தின் தேசிய ஒருமைப்பாட்டை போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்தநிலையில் நாடு முழுவதும் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம்’ சாா்ந்த நிகழ்ச்சிகளை ஏற்கெனவே இணைந்து நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் அவற்றை வரும் அக்டோபா் வரை தொடா்ந்து நடத்த வேண்டும். இது தொடா்பாக மாதந்தோறும் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ங்க்ஷள்க்ஷம்ட்ழ்க்19ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும்‘யுஏஎம்பி’ என்ற பல்கலைக்கழக செயல்பாடுகளுக்கான கண்காணிப்பு தளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உயா்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அறிவுறுத்தியுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...