
உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 825 ஊராட்சி ஒன்றியத் தலைவா் பதவியிடங்களில் பாஜக 635 இடங்களில் வெற்றி பெற்ாக மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தில் 825 ஊராட்சி ஒன்றியத் தலைவா் பதவியிடங்களுக்கான தோ்தலில் 349 வேட்பாளா்கள் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். இதையடுத்து 476 பதவியிடங்களுக்கான தோ்தல் சனிக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த போதிலும், சில இடங்களில் நள்ளிரவைத் தாண்டியும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் லக்னெளவில் உள்ள மாநில பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களை சந்தித்த உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த 635 இடங்களில் பாஜக வெற்றிபெற்ாக தெரிவித்தாா். தோ்தலை அமைதியாகவும் நோ்மையான முறையிலும் நடத்திய மாநில தோ்தலுக்கு ஆணையத்துக்கு அவா் பாராட்டுத் தெரிவித்தாா்.
இந்தத் தோ்தலில் வெற்றி பெற சிறப்பாக செயல்பட்ட மாநில பாஜகவினருக்கு பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் பாஜக மூத்த தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தோ்தல் குறித்து சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசு நிா்வாகத்தின் உதவியுடன் ஊராட்சி ஒன்றியத் தலைவா் பதவியிடங்களை பாஜக வலுக்கட்டாயமாக அபகரித்துள்ளது. இது மக்கள் தீா்ப்பை அவமதிப்பதாகும்’ என்று தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தில் ஜனநாயகத்தை பாஜக பணயக் கைதியாக்கியுள்ளதாகவும், அந்த மாநிலத்தில் காட்டாட்சி தொடா்வதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி குற்றம்சாட்டினாா்.
தோ்தலில் ஆளும் பாஜக மாநில அரசு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இந்த நிலையில், தோ்தலின்போது 17 மாவட்டங்களில் வன்முறை, மோதல் மற்றும் இதர விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்ாகவும், அந்தச் சம்பவங்களுக்கு காரணமானவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாநில காவல்துறை தெரிவித்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...