பாஜக மாநிலங்களவை தலைவராகிறார் பியூஷ் கோயல்

பாஜகவின் மாநிலங்களவை குழுத் தலைவராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
piyushgoyalgkhf57im_400x400101413
piyushgoyalgkhf57im_400x400101413
Published on
Updated on
1 min read

பாஜகவின் மாநிலங்களவை குழுத் தலைவராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாஜகவின் மாநிலங்களவை குழு தலைவராக இருந்த மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட், கர்நாடகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அடுத்த மாநிலங்களவை தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், பாஜகவின் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பியூஷ் கோயல், தற்போது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பாஜக மாநிலங்களவை உறுப்பினராக கோயல் பொறுப்பு வகித்துவருகிறார்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கோயலுக்கு கூடுதலாக ஜவுளத்துறை ஒதுக்கப்பட்டது. கோயல் கூடுதலாக கவனித்துவந்த ரயில்வே துறையானது அஸ்வினி வைஷ்ணவுக்கு ஒதுக்கப்பட்டது.

ரயில்வே துறை அமைச்சராக கோயல் இருந்தபோதுதான், பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் சாதனை புரிந்ததாக ரயில்வே துறையின் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பியூஷ் கோயலின் தந்தை வேத் பிரகாஷ் கோயல், வாஜ்பாய் அமைச்சரவையில் கப்பல் போக்குவரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com