சத்தீஸ்கரில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

ஏழு பெரிய மாநிலங்களின் தினசரி கரோனா பாதிப்பை காட்டிலும் சத்தீஸ்கரில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகளவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

ஏழு பெரிய மாநிலங்களின் தினசரி கரோனா பாதிப்பை காட்டிலும் சத்தீஸ்கரில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகளவில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் நேற்று (வெள்ளிக்கிழமை) 312 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, உத்தரப் பிரதேசம் (77), ராஜஸ்தான் (35), மத்தியப் பிரதேசம் (15), குஜராத் (38), தில்லி (66), ஜார்க்கண்ட் (52), ஹரியாணா (46) ஆகிய மாநிலங்களின் தினசரி கரோனா பாதிப்பை காட்டிலும் அதிகளவில் சத்தீஸ்கரில் பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்படுவோர் விகிதம் 1 சதவிகிதமாக இருந்தபோதிலும், தினசரி கரோனா பாதிப்பின் சராசரி 300ஆக பதிவாகியுள்ளது. 

இதுகுறித்து மாநிலத்தின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் சுபாஷ் மிஸ்ரா கூறுகையில், "மற்ற மாநிலங்களை காட்டிலும், சத்தீஸ்கரில் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனையை மேலும் அதிகரித்து மாவட்ட அளவில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். எனவே, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com