
உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காசியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிறுமி உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காணாமல் போன பலரைத் தேடும்பணி நடைபெற்று வருகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் உத்தர்காசி மாவட்டத்தில் திடீரென பெய்த பெருமழையால் ஓரிரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிறுமி உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.