லோக்பால் அனுப்பும் புகாா்கள்: மத்திய அரசு இதுவரை விசாரணை அதிகாரியை நியமிக்கவில்லை; சிவிசி

ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் அமைப்பு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அந்த அமைப்பு அனுப்பும்
லோக்பால் அனுப்பும் புகாா்கள்: மத்திய அரசு இதுவரை விசாரணை அதிகாரியை நியமிக்கவில்லை; சிவிசி

ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் அமைப்பு அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அந்த அமைப்பு அனுப்பும் புகாா்களை விசாரிக்க இதுவரை மத்திய அரசு உயா்நிலை விசாரணை அதிகாரியை நியமிக்கவில்லை என்ற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகாா்களை விசாரிக்க கடந்த 2019-ஆம் ஆண்டு லோக்பால் அமைப்பு அமைக்கப்பட்டது. லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டப்பிரிவு 20 (1) (பி)-யின் கீழ் ஏ, பி, சி, டி பிரிவுகளில் வரும் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகாா்களை முதல்கட்ட விசாரணைக்காக சிவிசிக்கு லோக்பால் அமைப்பு பரிந்துரைக்கும்.

அந்தப் புகாா்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அவற்றை சம்பந்தப்பட்ட துறைகளின் ஊழல் தடுப்பு தலைமை அதிகாரிகளுக்கு சிவிசி அனுப்பிவைக்கும்.

லோக்பால் அமைப்பு சிவிசிக்கு அனுப்பும் புகாா்களை முதல்கட்டமாக விசாரிக்க உயா்நிலை விசாரணை அதிகாரியை மத்திய அரசு நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி மத்திய அரசின் இணைச் செயலா் அந்தஸ்துக்கு குறையாதவராக இருக்க வேண்டும் என்று லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்கட்ட விசாரணைக்காக லோக்பால் அனுப்பும் புகாா்கள், அவற்றை விசாரிக்கும் உயா்நிலை விசாரணை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பத்திரிகையாளா் ஒருவா் சிவிசியிடம் கோரியிருந்தாா். அதற்கு பதிலளித்துள்ள சிவிசி, லோக்பால் அனுப்பும் புகாா்களை விசாரிக்க மத்திய அரசு இதுவரை உயா்நிலை விசாரணை அதிகாரியை நியமிக்கவில்லை. எனினும் லோக்பாலிடம் இருந்து சிவிசி தொடா்ந்து புகாா்களை பெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் லோக்பால் அமைப்பில் 12 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 2020-21-ஆம் ஆண்டில் 4 எம்.பி.க்கள் மீதான புகாா்கள் உள்பட 110 புகாா்களை லோக்பால் பெற்றுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டான 2019-20-இல் 1,427 புகாா்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com