'கரோனா மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது ஊகமே'

பெருந்தொற்றின் எதிர்வரும் அலைகள் குழந்தைகளை பாதிக்கும் என்பது ஊகத்தின் அடிப்படையிலான கூற்று என்று புது தில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் குழந்தை மருத்துவப் பிரிவு இயக்குநர் டாக்டர் பிரவீன் க
'கரோனா மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது ஊகமே'
'கரோனா மூன்றாம் அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது ஊகமே'

புதுதில்லி: பெருந்தொற்றின் எதிர்வரும் அலைகள் குழந்தைகளை பாதிக்கும் என்பது ஊகத்தின் அடிப்படையிலான கூற்று என்று புது தில்லி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் குழந்தை மருத்துவப் பிரிவு இயக்குநர் டாக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளிடையே ஏற்படும் கொவிட்-19 தொற்றின் தாக்கம், அவர்களின் பாதுகாப்பு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து புது தில்லி  லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரியின் குழந்தை மருத்துவப் பிரிவு இயக்குநர் டாக்டர் பிரவீன் குமார் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

குழந்தைகளின் மன நலன் மற்றும் உடல் நலனைப் பெருந்தொற்று எவ்வாறு பாதித்துள்ளது? அதன் நீண்ட கால தாக்கத்தை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளின் மனநலன் மற்றும் உடல்நலனில் பெருந்தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஒரு ஆண்டுக்கும் மேலாக குழந்தைகள் வீட்டிலேயே அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் பாதிப்பு, பெற்றோருக்கு ஊதியக் குறைப்பு போன்றவற்றால் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. 
வித்தியாசமாக நடந்து கொள்வதன் வாயிலாக உளவியல் ரீதியான பாதிப்பை குழந்தைகள் வெளிப்படுத்தக் கூடும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் நடந்துக் கொள்வார்கள். ஒரு சிலர் திடீரென அமைதியாக இருப்பார்கள், வேறு சிலர் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

எதிர்கால அலைகள் குழந்தைகளைக் கடுமையாக பாதிக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?  கரோனா தொற்றின் எதிர்கால அலையில் குழந்தைகளுக்குப் போதிய மருத்துவ வசதி செய்து தருவது தொடர்பாக நாடு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

நாம் அறிந்தவாறு கொவிட்-19 என்பது உருமாறும் தன்மையுடைய புதிய தொற்று நோய். எதிர்கால அலைகள் குழந்தைகளை பாதிக்குமா அல்லது தொற்றின் தீவிரம் அதிகரிக்குமா என்பது அனைத்தும் ஊகங்களே. பெரும்பாலான பெரியவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாலும், தற்போதைய நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி அனுமதிக்கப்படவில்லை என்பதாலும், வருங்கால அலைகள் குழந்தைகளை பாதிக்கும் என்று மக்கள் ஊகத்தின் அடிப்படையில் தெரிவித்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் இந்த தொற்றுநோய் குழந்தைகளிடையே எந்தவகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாத நிலையிலும் அதிலிருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் கரோனா தடுப்பு நடத்தை விதிமுறையை பின்பற்றுவதுடன், வெளியில் சென்று வரும்போது தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமூக நிகழ்வுகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் பெருமளவு குறையும்.

தற்போது கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கருவில் உள்ள குழந்தையும் பிறந்த குழந்தையும் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com