ஜம்மு விமான நிலையம் அருகே மற்றொரு டிரோன்

ஜம்மு விமான நிலையம் அருகே இன்று காலை மீண்டும் ஒரு டிரோன பறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு விமான நிலையம் அருகே பறந்த மற்றொரு டிரோன்  (கோப்பிலிருந்து)
ஜம்மு விமான நிலையம் அருகே பறந்த மற்றொரு டிரோன்  (கோப்பிலிருந்து)

ஜம்மு விமான நிலையம் அருகே இன்று காலை மீண்டும் ஒரு டிரோன பறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு விமான நிலையம் அமைந்துள்ள சத்வாரி என்ற பகுதியில் புதன்கிழமை காலை டிரோனா ஒன்று பறந்துள்ளது. மேலும், இதுகுறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சுதந்திர தினம், ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த தினங்களில் டிரோன்கள் மூலம் தில்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஒரு சில வாரங்களாகவே, ஜம்முவின் பல்வேறு பகுதிகளிலும் டிரோன்கள் பறப்பது அதிகரித்துள்ளது. 

ஸ்ரீநகர், குப்வாரா, ரஜௌரி மற்றும் பாரமுல்லா பகுதிகளிலும் டிரோன்கள் மூலம் விற்பனை, பொருள்கள் பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 27ஆம் தேதி, ஜம்முவில் சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே ஜம்மு மாவட்டத்தில் டிரான்கள் பறந்துவந்து இந்திய விமானப் படைத் தளத்தின் அலுவலகக் கட்டடத்தை சேதப்படுத்தின. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com