
நாட்டில் 41.78 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாடு முழுவதும் இதுவரை 41.78 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,383 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, மொத்தம் 41,78,51,151 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது |
முதல் தவணை - 13,05,53,816 இரண்டாம் தவணை - 53,22,634 |
45 - 59 வயது |
முதல் தவணை - 9,89,17,103 இரண்டாம் தவணை - 3,15,85,098 |
60 வயதுக்கு மேல் |
முதல் தவணை - 7,26,86,361 இரண்டாம் தவணை - 3,25,22,772 |
சுகாதாரத்துறை |
முதல் தவணை - 1,02,77,386 இரண்டாம் தவணை - 76,11,600 |
முன்களப் பணியாளர்கள் |
முதல் தவணை - 1,78,24,546 இரண்டாம் தவணை - 1,05,49,835 |
மொத்தம் | 41,78,51,151 |