கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு 44 ஆக உயர்வு; சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைப்பு

கேரளத்தில் மேலும் மூன்று பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானதை அடுத்து  மொத்த பாதிப்பு 44 ஆக உயர்ந்துள்ளது. 
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்

கேரளத்தில் மேலும் மூன்று பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானதை அடுத்து  மொத்த பாதிப்பு 44 ஆக உயர்ந்துள்ளது. 

ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ் பாதிப்பு கேரளத்தில் அதிகரித்து வருகிறது. கேரளத்தில் பரவும் இந்த வைரஸால் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களும் தற்போது பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளன. 

கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு நேற்று 41 ஆக இருந்த நிலையில் மேலும் மூன்று பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 44 ஆக அதிகரித்துள்ளது. 

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இதுகுறித்து, 'ஜிகா வைரஸ் பாதிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு 44 ஆக உயர்ந்துள்ளது. 

ஜிகா வைரஸைக் கட்டுப்படுத்த நாங்கள் ஒரு மைக்ரோ திட்டத்தை உருவாக்கியுள்ளோம், ரெக்டர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கொசுமருந்து புகை அடிக்கவும் முடிவு செய்துள்ளோம். திருவனந்தபுரம் மாநகராட்சியில் இந்த நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. 7 நாள்களுக்குள் அனைத்துப் பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட மருத்துவ அலுவலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை செயல்படத் தொடங்கியுள்ளது, ஜிகா வைரஸ் பற்றிய தகவல்கள் அல்லது சந்தேகங்கள் குறித்து மக்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com