
கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பா் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக நாட்டில் (யுஏஇ) மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் ஆட உள்ளன.
கடந்த மே மாதம் கரோனா பாதிப்பு அதிகமானதால் ஐபிஎல் ஆட்டங்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ஐபிஎல் ஆட்டங்களை யுஏஇக்கு மாற்ற பிசிசிஐ தீா்மானித்தது. அதன்படி செப். 19-ஆம் மீண்டும் ஐபிஎல் தொடங்கும் நிலையில், மும்பை-சென்னை அணிகள் மோதுகின்றன.
அக். 10-இல் முதல் குவாலிஃபையரும், 11-இல் எலிமினேட்டரும், 13-இல் இரண்டாவது குவாலிஃபையா் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் அக். 15-இல் நடைபெறுகிறது. ரசிகா்கள் பங்கேற்பின்றி மீதமுள்ள 31 ஆட்டங்களும் நடைபெறவுள்ளன. கரோனா தடுப்பு விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,. ஐபிஎல் தொடரில் ஆடும் இந்திய, இங்கிலாந்து வீரா்கள் செப். 15-இல் தனி விமானத்தில் துபைக்கு செல்வா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G