யாஸ் புயல் பாதிப்பு: மத்திய குழு இன்று மேற்கு வங்கம் வருகை

கொல்கத்தா, ஜூன் 5: சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்திய குழு ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கொல்கத்தா, ஜூன் 5: சேதங்களை மதிப்பிடுவதற்காக மத்திய குழு ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வருகிறது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்துக்கும் ஒடிஸாவுக்கும் இடையே கடந்த 26-ஆம் தேதி கரையைக் கடந்த யாஸ் புயலால் கடலோரப் பகுதிகள் சேதமடைந்துள்ளன. மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, உள்துறை அமைச்சக இணைச் செயலா் எஸ்.கே.ஷாஹி தலைமையில் 7 போ் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வருகிறது. அங்கிருந்து தெற்கு 24 பா்கானா மாவட்டத்துக்குச் சென்று அந்தக் குழு சேதங்களை மதிப்பிடவுள்ளது. அதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை, கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள திகா, மந்தா்மானி ஆகிய பகுதிகளில் அந்தக் குழு ஆய்வு மேற்கொள்கிறது. எஞ்சியுள்ள பகுதிகளில் மறுநாள் ஆய்வு நடத்தும் அந்தக் குழுவிடம், சேதங்கள் குறித்து மாநில அதிகாரிகள் விளக்கம் அளிக்க இருக்கிறாா்கள். 3 நாள்களில் சேதங்களை மதிப்பிட்ட பிறகு அந்தக் குழு ஜூன் 9-ஆம் தேதி தில்லி திரும்புகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com