தெலங்கானாவில் ஜூன் 20 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

தெலங்கானாவில் ஜூன் 20-ம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெலங்கானாவில் ஜூன் 20-ம் தேதி வரை தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் ஏற்கெனவே அமலில் இருக்கும் பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. 

இந்த நிலையில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பொது முடக்கத்தை நாளை முதல் மேலும் 10 நாள்களுக்கு நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் "குடிமக்கள் வீடு திரும்ப பிற்பகல் 6 மணி வரை பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை பொது முடக்கம் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துப்பள்ளி, மதிரா, நல்கொண்டா, நாகார்ஜுனா சாகர், தேவரகொண்டா, முனுகோடு, மிரியலகுடா ஆகிய பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com