'தடுப்பூசி அவசியம்': அசாமில் தனியொருவனாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'தடுப்பூசி மனிதன்'

அசாம் மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மக்களிடையே கரோனா தடுப்பூசி குறித்து தனிநபர் ஒருவர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அசாம் மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மக்களிடையே கரோனா தடுப்பூசி குறித்து தனிநபர் ஒருவர் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

இதுவரை முதியவர்கள், பெண்கள் என 80-க்கும் அதிகமானோருக்கு அவரது விழிப்புணர்வு மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் 'தடுப்பூசி மனிதர்' என்று பலரால் அவர் அறியப்படுகிறார்.

அசாம் மாநிலம் துப்ரி பகுதியைச் சேர்ந்தவர் தீபன்கர் மஜும்தர். 36 வயதான இவர், மருத்துவ பிரதிநிதியாகப் பணிபுரிந்து வருகிறார். 

இதனிடையே கடந்த ஆண்டு முதல் கரோனா பரவலால் பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முன்வருமாறு நாட்டு மக்களிடையே அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

அந்தவகையில் மருத்துவ பிரதிநிதியான மஜும்தர், வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

இது குறித்து அவர் பேசியதாவது, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் பலதரப்பட்ட மக்களிடையே கரோனா தடுப்பூசி குறித்த தவறான எண்ணம் நிலவுகிறது. அதனைப் போக்க வேண்டியது நமது கடமை. 

மேலும், ஸ்மார்ட் போன்கள் இல்லாமல் ஏராளமான ஏழை மக்கள் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி குறித்த சிந்தனையே இல்லை. இதனால் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள், பெண்கள், இளைஞர்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்று கூறினார். 

இதுவரை 80-க்கும் அதிகமானோரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர் அழைத்து வந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com