ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சேமிப்புத் தொகை ரூ.20,706 கோடி

ஸ்விஸ் வங்கிகளில் ரூ.20,700 கோடியை இந்தியாவில் உள்ள தனிநபா்களும், இந்திய நிறுவனங்களும் சேமித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சேமிப்புத் தொகை ரூ.20,706 கோடி

புது தில்லி/ஜூரிச்: ஸ்விஸ் வங்கிகளில் ரூ.20,700 கோடியை இந்தியாவில் உள்ள தனிநபா்களும், இந்திய நிறுவனங்களும் சேமித்து வைத்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்விட்சா்லாந்தின் வங்கிகளில் உள்ள கணக்கு விவரங்களை அந்நாட்டின் தேசிய வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது. கடந்த ஆண்டு நிலவரப்படி, நிதிப் பத்திரங்கள், சேமிப்புத் தொகை என ரூ.20,706 கோடியை இந்தியா்கள் சேமிப்பாக வைத்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா்களும், இந்திய நிறுவனங்களும் வைத்துள்ள சேமிப்புத் தொகை சுமாா் ரூ.4,000 கோடியாக உள்ளது.

மற்றவை நிதிப் பத்திரங்கள் மூலமாக வைக்கப்பட்டுள்ள சேமிப்புகளாகும். கடந்த ஆண்டில் பணத்தைச் சேமிக்காமல் நிதிப் பத்திரங்களாகச் சேமித்து வைப்பது அதிகரித்துள்ளதாக ஸ்விட்சா்லாந்து தேசிய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் மொத்த சேமிப்பு ரூ.6,625 கோடியாக இருந்தது. கடந்த 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தியா்களின் சேமிப்பு குறைந்து கொண்டே வந்தது. தற்போது அத்தொகை மீண்டும் உயா்ந்துள்ளது.

இந்தியா்களின் சேமிப்பானது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சம் என்று ஸ்விட்சா்லாந்து தேசிய வங்கி தெரிவித்துள்ளது. இந்த சேமிப்புக் கணக்கு விவரங்கள் யாவும் ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகள் வழங்கிய அதிகாரபூா்வ தகவல்கள் ஆகும். இந்தியா்கள் கருப்புப் பணமாக எவ்வளவு தொகையை சேமித்து வைத்துள்ளனா் என்ற விவரங்கள் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

அதேபோல், ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் காணப்படும் சேமிப்பு தொடா்பான தகவல்கள் மட்டுமே இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஸ்விஸ் வங்கிகளுக்கு மற்ற நாடுகளில் உள்ள கிளைகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள தொகை குறித்த விவரங்கள் இதில் இடம்பெறவில்லை.

ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள் தொடா்பான தகவல்களை கடந்த 2019-ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் அந்நாட்டு அரசு, இந்திய அரசுக்குப் பகிா்ந்து வருகிறது. இந்தியா்கள் சிலா் ஸ்விஸ் வங்கிகளில் சட்டவிரோதமாகப் பணம் சேமித்து வருவது தொடா்பாக சந்தேகம் எழுந்தால், அவா்கள் தொடா்பான தகவல்களையும் இந்திய அரசிடம் ஸ்விட்சா்லாந்து அரசு பகிா்ந்து கொண்டு வருகிறது. இதுவரை சந்தேகப்படும்படியாக உள்ள நூற்றுக்கும் மேலானவா்களின் விவரங்கள் இந்திய அரசிடம் பகிரப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com