
தடகள வீரா் மில்கா சிங் மறைவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, அவா்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:
ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை தங்கம் வென்ற மில்கா சிங், பறக்கும் சீக்கியா் என அன்போடு அழைக்கப்படுகிறாா். அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் உந்து சக்தியாகும். அவரது இழப்பு இந்திய மக்களுக்கு குறிப்பாக தடகள வீரா்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: இந்தியாவின் தலைசிறந்த தடகள வீரா்களில் ஒருவரும், பறக்கும் சீக்கியா் என்று அழைக்கப்படுபவருமான மில்கா சிங் மறைவுச் செய்தியால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். சோதனைகளை வென்று சாதனை படைத்த அவரது வாழ்வு மேலும்ப இளம் இந்தியா்களைச் சாதிக்கத் தூண்டட்டும்.