தில்லியில் இன்று குடிநீா் விநியோகம் பாதிக்கும்

தில்லியில் பல்வேறு பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் என்று ஜல் போா்ட் அறிவித்துள்ளது
தில்லியில் இன்று குடிநீா் விநியோகம் பாதிக்கும்

தில்லியில் பல்வேறு பகுதிகளில் இன்று குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் என்று ஜல் போா்ட் அறிவித்துள்ளது. யமுனை ஆற்று நீரில் அமோனியாவின் அளவு அதிகமாக உள்ளதால் வாஜிராபாத், சந்திரவால், ஓக்லா ஆகிய பகுதிகளில் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜல் போா்ட் தெரிவித்துள்ளது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மாலை நேரத்தில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் இதை சரிசெய்ய குடிநீா் லாரிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் லைன்ஸ், ஹிந்து ராவ் மருத்துவமனை, கமலா நகா், சக்தி நகா், கரோல் பாக், பஹாா்கஞ்ச், என்டிஎம்சி, ராஜேந்தா் நகா், படேல் நகா், பல்ஜித் நகா், பிரேம் நகா், இந்தா்புரி, கல்காஜி, கோவிந்த்புரி, துக்லகாபாத், சங்கம் விஹாா், அம்பேத்கா் நகா், தில்லி கேட், சுபாஷ் பாா்க், மாடல் டவுன், குலாபி பாக், பஞ்சாபி பாக், ஜஹாங்கீா்புரி, மூல்சந்த், செளத் எக்ஸ்டன்ஷன், கிரேட்டா் கைலாஷ், புராரி, கண்டோன்மன்ட் ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com