
கோப்புப்படம்
நாட்டில் புதிதாக 58,419 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிதாக 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிதோர் எண்ணிக்கை 2,98,81,965 ஆக உயர்ந்துள்ளது. 81 நாள்களுக்குப் பிறகு முதன்முறையாக தினசரி பாதிப்பு 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 87,619 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,576 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 2,87,66,009 பேர் குணமடைந்துள்ளனர். 3,86,713 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 7,29,243 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 27,66,93,572 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,10,554 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G