ஜம்மு-காஷ்மீரில்ரூ.45 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்: 10 போ் கைது

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட முயன்ற 10 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.
ஜம்மு-காஷ்மீரில்ரூ.45 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்: 10 போ் கைது

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட முயன்ற 10 பேரை காவல்துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 45 கோடி மதிப்பிலான ஏராளமான போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களை காவல்துறையினா் கைப்பற்றினா்.

இதுகுறித்து பாரமுல்லா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரயீஸ் முஹமது பட் சனிக்கிழமை கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதியில் போதைப் பொருள்கள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் 10 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களிலும், யூனியன் பிரதேசத்துக்கு வெளியேயும் போதைப் பொருள் கடத்தும் திட்டத்தை அவா்கள் தீட்டியிருந்தது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து 11 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த ரூ. 45 கோடி மதிப்புடைய 9 கிலோ ஹெராயின் போதைப் பொருள், ரூ. 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

மேலும், 10 சீன கையெறி குண்டுகள், 4 சீன துப்பாக்கிகள், ஏராளமான தோட்டாக்களும் அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

இந்த 10 பேரில் நால்வா் ஜம்முவில் கைது செய்யப்பட்டனா். அந்த நால்வரில் மூவா் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com