இந்தியாவில் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 7.60 லட்சமாக சரிவு

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 74 நாள்களுக்குப் பிறகு 7,60,019-ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 7.60 லட்சமாக சரிவு

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 74 நாள்களுக்குப் பிறகு 7,60,019-ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 60,753 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, 12-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.

அதே கால அளவில் 97,743 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்கள். நாட்டில் இதுவரை 2,86,78,390 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

தொடா்ந்து 37-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 74 நாள்களுக்குப் பிறகு 7,60,019-ஆக குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 2.55 சதவீதமாகும்.

நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 38,92,07,637 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், வெள்ளிக்கிழமை மட்டும் 19,02,009 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 33,00,085 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை காலை வரையிலான தகவல்படி, இதுவரை மொத்தம் 37,48,147 முகாம்களில் 27,23,88,783 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com