தில்லியை விஞ்சிய சென்னை: பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிய நகரங்கள்

தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 97.50 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.88.23 காசுகளுக்கும் விற்பனையாகிறது. 
தில்லியை மிஞ்சிய சென்னை: பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிய நகரங்கள்
தில்லியை மிஞ்சிய சென்னை: பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிய நகரங்கள்

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தில்லியை விட சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது.

தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 97.50 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.88.23 காசுகளுக்கும் விற்பனையாகிறது. 

இதேபோன்று சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.65 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.83 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

தில்லியில் ஜூன் மாதத்தில் மட்டும் 12-வது முறையாக பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் 16 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டிய நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்து நூறு ரூபாயை எட்டவுள்ளது.

ஒரு லிட்டர் ரூ.100-ஐ தாண்டிய நகரங்கள்:

கடந்த மாதத்தில் பெட்ரோல் விலை மூன்று இலக்கத்தை எட்டி நூறு ரூபாயைத் தாண்டிய நகரங்களின் பட்டியலில் போபால் முதலிடத்தில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜெய்ப்பூர், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.

நாட்டில் அதிகபட்சமாக இம்மாத தொடக்கத்தில் ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.67 காசுகளுக்கு விற்பனையானது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

இதேபோன்று மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108.30 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.99.31 காசுகளுக்கு விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com