கரோனா 3-வது அலைக்குத் தயாராக இருக்க வேண்டும்: ராகுல்

கரோனா 3-வது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி


கரோனா 3-வது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். 

சுட்டுரையில் காணொலி மூலமாக செய்தியாளர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, கரோனா மூன்றாவது அலை கட்டாயம் வரும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். 

கரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில் கடந்த கால தவறுகளை மத்திய அரசு மீண்டும் செய்தால் கரோனா பாதிப்பு மீண்டும் தொடரும்.

மாநிலங்களுக்கு இடையே எந்தவித வேறுபாடும் காட்டாமல், அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

கரோனா இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. அவற்றை தவிர்த்திருக்க முடியும். அப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக இருந்தது. அவற்றிற்கு வழி செய்ய வேண்டும். பிரதமரின் கண்ணீர் மக்களின் உயிரைக் காக்காது  என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com