இந்தியாவில் 3 கோடியை கடந்தது கரோனா பாதிப்பு: 50 நாள்களில் 1 கோடி பேருக்கு தொற்று

இந்தியாவில் கரோனா மொத்த பாதிப்பு 3 கோடியைக் கடந்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான நிலவரப்படி கரோனா பாதிப்பு 3 கோடியே 28 ஆயிரத்து 709-ஆக இருந்தது.
இந்தியாவில் 3 கோடியை கடந்தது கரோனா பாதிப்பு: 50 நாள்களில் 1 கோடி பேருக்கு தொற்று

புது தில்லி: இந்தியாவில் கரோனா மொத்த பாதிப்பு 3 கோடியைக் கடந்துள்ளது. புதன்கிழமை காலை வரையிலான நிலவரப்படி கரோனா பாதிப்பு 3 கோடியே 28 ஆயிரத்து 709-ஆக இருந்தது.

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி ஒரு கோடியை கடந்தது. அடுத்த 136 நாள்களில், அதாவது கடந்த மே 4-ஆம் தேதி 2 கோடியை கடந்த நிலையில், அடுத்த 50 நாள்களில் மேலும் ஒரு கோடி பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு 3 கோடியை கடந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 50,848 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை 42,640-ஆக தினசரி பாதிப்பு இருந்த நிலையில் இப்போது அதிகரித்துள்ளது.

6-ஆவது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 82 நாள்களுக்குப் பிறகு 6,43,194-ஆக குறைந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 2.14 சதவீதமாகும். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 19,327 சரிந்துள்ளது.

தொடா்ந்து 41-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 68,817 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்கள்.

இதுவரை மொத்தம் 2,89,94,855 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன்படி குணமடைந்தவா்களின் விகிதம் 96.56 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வாராந்திர தொற்று உறுதி விகிதமானது 3.12 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.67 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தொடா்ந்து 16 நாள்களாக இந்த எண்ணிக்கை 5 சதவீதத்துக்கு குறைவாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,01,056 பரிசோதனைகளும், இதுவரை மொத்தம் 39,59,73,198 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 29 கோடியைக் கடந்துள்ளது. 29,46,39,511 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பு விவரம்

ஆகஸ்ட் 7 20 லட்சம்

ஆகஸ்ட் 23 30 லட்சம்

செப்டம்பா் 5 40 லட்சம்

செப்டம்பா் 16 50 லட்சம்

செப்டம்பா் 28 60 லட்சம்

அக்டோபா் 11 70 லட்சம்

அக்டோபா் 29 80 லட்சம்

நவம்பா் 20 90 லட்சம்

டிசம்பா் 19 1 கோடி

மே 4 2 கோடி

ஜூன் 23 3 கோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com