கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்புக்கு கூடுதல் மருந்துகள் வழங்க முடிவு

கா்நாடகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்குவதற்காக கூடுதலாக மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன என மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கெளடா தெரிவித்தாா்.
கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்புக்கு கூடுதல் மருந்துகள் வழங்க முடிவு

பெங்களூரு: கா்நாடகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்குவதற்காக கூடுதலாக மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன என மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கெளடா தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை அவா் தெரிவித்ததாவது:

கா்நாடகத்தில் கருப்புப் பூஞ்சை நோயாளிகளுக்கு வழங்குவதற்காக லைபோசோமல் ஆம்போடெரிசின்-பி மருந்துகள் 5,240 குப்பிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.

கா்நாடகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எளிதாக மருந்து கிடைக்க வகை செய்வதற்காக, இதுவரை 60,350 குப்பி மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன. நாட்டில் திடீரென லைபோசோமல் ஆம்போடெரிசின்-பி மருந்தின் தேவை அதிகரித்துவிட்டதால், அதன் உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு 66,120 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுவரை 7.9 லட்சம் குப்பி மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கும் நோக்கத்தில் போதுமான மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com