மகாராஷ்டிரத்தில் 3 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

நாட்டில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரத்தில் 3 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் 3 கோடி தடுப்பூசிகள்
மகாராஷ்டிரத்தில் 3 கோடி தடுப்பூசிகள்

நாட்டில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரத்தில் 3 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் நாட்டில் அதிக பாதிப்பை கண்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ள நிலையில், அதிக தடுப்பூசிகள் செலுத்தும் மாநிலமாக மாறியுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, மாநிலத்தில் 3,00,27,217 தவணை தடுப்பூசிகளை கடந்து செலுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி பிரதீப் வியாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், 3 கோடி என்ற இலக்கை எட்டிய முதல் மாநிலமாகவும் மகாராஷ்டிரம் உருவெடுத்துள்ளது.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முன்களப் பணியாளர்கள், வயதுடையோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என பல கட்டங்களை கடந்து நாட்டில் இதுவரை 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com