தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கைகளில் அமெரிக்காவை முந்தி இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 32,36,63,297 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 32,33,27,328 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள்
நாடு | தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய தேதி | இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் |
பிரிட்டன் | டிசம்பர் 8 | 7,67,74,990 |
அமெரிக்கா | டிசம்பர் 14 | 32,33,27,328 |
இத்தாலி | டிசம்பர் 27 | 4,96,50,721 |
ஜெர்மனி | டிசம்பர் 27 | 7,14,37,514 |
பிரான்ஸ் | டிசம்பர் 27 | 5,24,57,288 |
இந்தியா | ஜனவரி 16 | 32,36,63,297 |