
தில்லி காவல்துறை ஆணையராக பாலாஜி ஸ்ரீவஸ்தவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தில்லி காவல் ஆணையராக இருந்த எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா புதன்கிழமையுடன் ஓய்வு பெறுவதையடுத்து புதிய காவல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாலாஜி ஸ்ரீவஸ்தவ், தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு காவல் ஆணையராக உள்ளார். இவருக்கு கூடுதல் பொறுப்பாக தில்லி காவல்துறை ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டு காவல் பணியில் தேர்வான இவர், கடைசியாக புதுச்சேரி காவல்துறை தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.