
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (ஜூன் 30) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தில்லியில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. கடந்த மாதத்தில் அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடியை நட்டா சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஒரு சில மூத்த தலைவர்களுக்கு பதவிகள் வழங்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.