

ஜம்மு-காஷ்மீரில் முதியவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக சீக்கியப் பெண்களை கட்டாய மத மாற்றம் செய்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சீக்கியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தில்லியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து சீக்கிய கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி முனையில் சீக்கிய பெண்கள் இருவர் கடத்தப்பட்டு திருமணத்திற்காக கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து சீக்கியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் எஸ் சிர்சா, இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.