
நாடு முழுவதும் இதுவரை 51 பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 174 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 26-ம் தேதி நிலவரப்படி அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 20 பேரிடம் அந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, தமிழகத்தில் 9 போ், மத்திய பிரதேசத்தில் 7 போ், கேரளத்தில் 3போ், பஞ்சாப், குஜராத்தில் தலா இருவா், ஆந்திரம், ஒடிஸா, ராஜஸ்தான், ஜம்மு, கா்நாடகத்தில் தலா ஒருவருக்கும் டெல்டா பிளஸ் வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 10.31 சதவீதமாக இருந்த டெல்டா பிளஸ் தொற்று, இந்த மாதம் 51 சதவீதமாக அதிகரித்துள்ளது.