
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
உடல்நலக்குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் தொற்றிலிருந்து மீண்டார். இதனால் தொடர்ந்து பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ஜூன் மாதத் தொடக்கத்தில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சையில் இருந்த அவரின் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.