பிகாரில் பள்ளிகள் திறப்பு எப்போது? கல்வி அமைச்சர் விளக்கம்

பிகாரில் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 6ஆம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என மாநில கல்வி அமைச்சர் விஜய் குமார் செளத்ரி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளன. எனினும் மாநில நிலைகளுக்கேற்ப தற்போது படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பிகாரில் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 6ஆம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இரண்டு கட்டங்களாக கல்வி நிலையங்கள் திறப்பு இருக்கும் என தெரிவித்த கல்வி அமைச்சர் விஜய்குமார் செளத்ரி முதல்கட்டமாக பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், இரண்டாம் கட்டமாக பள்ளிகளும் திறக்கப்படும் என்றார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் பிகாரில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பால் மீண்டும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com