
இந்தியாவில் இன்று மேலும் 15,510 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 15,510 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,10,96,731 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றிலிருந்து இன்று 11,288 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,07,86,457 பேர் குணமடைந்து வீடுதிரும்பிள்ளனர். 1,68,627 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா பாதிப்பால் மேலும் 106 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து கரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,57,157 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,43,01,266 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வரை 21,68,58,774 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 28ஆம் தேதி மட்டும் 6,27,668 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...