கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ் வர்தன் தில்லியில் உள்ள மருத்துவமனையில் இன்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்


புது தில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ் வர்தன் தில்லியில் உள்ள மருத்துவமனையில் இன்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

தில்லியில் உள்ள இதய மற்றும் நுரையீரல் மையத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், முதல் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அவருடன், அவரது மனைவியும் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கிய நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. முதல் நாளில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

நாட்டில் இதுவரை 1 கோடியே 48 லட்சத்து 54,136 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com