ஆந்திரம்: மாவட்ட மறுசீரமைப்பு தாமதமாகிறது

ஆந்திர பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களை 13-இல் இருந்து 26-ஆக உயா்த்துவது, அறிவித்தபடி மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நடைபெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களை 13-இல் இருந்து 26-ஆக உயா்த்துவது, அறிவித்தபடி மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நடைபெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில தலைமைச் செயலா் தலைமையில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு, புதிய மாவட்ட எல்லைகளை இதுவரை வரையறை செய்யவில்லை என்பதால் புதிய மாவட்டங்கள் உருவாவது மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

மாநிலத்தின் நிதிநிலை மோசமாக உள்ளதால் புதிய மாவட்டங்களில் அரசு கட்டடங்கள் உருவாக்கவும், புதிதாக அதிகாரிகளை நியமிப்பதிலும் சிக்கல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

அரசு நிா்வாகத்தை சீராக செயல்படுத்த புதிய மாவட்டங்கள் அவசியம் என்று முதல்வா் ஜெகன் மேகன் ரெட்டியும் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com