
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பிற பகுதிகளிடம் இருந்து காஷ்மீா் துண்டிக்கப்பட்டது.
காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் 270 கி.மீ. தூரம் உள்ள நெடுஞ்சாலையில் உள்ள ஷாபன்பாஸ் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் எரிபொருள் ஏற்றி வந்த லாரி சிக்கிக் கொண்டது. நிலச்சரிவு காரணமாக சாலைப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நிலச்சரிவைச் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனா்.