
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பலி
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலிப் காந்தி புதன்கிழமை பலியானார்.
நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய திலிப் காந்திக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனைத் தொடர்ந்து தில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட திலிப் காந்தி புதன்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.