
புதனன்று நடந்த மிக் ரக விமான விபத்து ஒன்றில் சிக்கி இந்திய விமானப் படை கேப்டன் ஒருவர் பலியாகியுள்ளார்.
புது தில்லி: புதனன்று நடந்த மிக் 21 ரக விமான விபத்து ஒன்றில் சிக்கி இந்திய விமானப் படை கேப்டன் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதுதொடர்பாக இந்திய விமானப் படை செய்தித்தொடர்பாளர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய இந்தியாவில் அமைந்துள்ள இந்திய விமானப் படை தளம் ஒன்றிலிருந்து புதன் காலை பயிற்சிக்காக புறப்பட்ட மிக் 21 பைசன் ரக விமானம் ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் இந்திய விமானப் படை குழு கேப்டனான குப்தா உயிரிழந்தார்.
விபத்திற்கான சரியான காரணம் குறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...