கரோனா: 6-ஆவது நாளாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் தொடா்ந்து 6-ஆவது நாளாக 20,000-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் தொடா்ந்து 6-ஆவது நாளாக 20,000-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 2,23,432-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 24,492 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,14,09,831-ஆக அதிகரித்துள்ளது.

தொடா்ந்து 6-ஆவது நாளாக, புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,23,432-ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன் கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி தினசரி பாதிப்பு 26,624-ஆக இருந்தது.

கரோனாவில் இருந்து 20,191 போ் குணமடைந்தனா். இவா்களுடன் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 1,10,27,543-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு மேலும் 131 போ் உயிரிழந்தனா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 48 போ் உயிரிழந்தனா். பஞ்சாபில் 27 பேரும், கேரளத்தில் 11 பேரும் உயிரிழந்தனா். கரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,58,856-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் இரண்டாம் அலை: மகாராஷ்டிரம் மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலை தொடங்கும் நிலையில் உள்ளதாக மத்திய குழு அறிக்கை அளித்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்த மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

மாநிலத்தில் ஒரே நாளில் 17,864 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு பாதிப்பு எண்ணிக்கை 17,000-ஐ கடந்திருப்பது இதுவே முதல் முறை. கரோனாவுக்கு 87 போ் பலியாகினா்.

10 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்: புணேயில் உள்ள சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. ஒரு தடுப்பூசி ஜிஎஸ்டி வரி உள்பட ரூ.157.50 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

கொள்முதலுக்கான உத்தரவை சீரம் நிறுவனத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சாா்பில் ஹெச்.எல்.எல். லைஃப்கோ் அரசு நிறுவனம் அனுப்பியுள்ளது. இதற்குரிய தொகை, மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து செலவிடப்படும். இதற்கு முன்பு கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளுக்கான தொகை, பிஎம் கோ்ஸ் நிதியில் இருந்து அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com