இலங்கை கடற்படைக்கு ரூ.81 லட்சத்திலான பயிற்சிக் கருவிகள்: இந்தியா வழங்கியது

இலங்கையின் கடற்படைக்கு சுமாா் ரூ.81 லட்சம் மதிப்பிலான பயிற்சிக் கருவிகளை இந்தியக் கடற்படை வழங்கியது.

இலங்கையின் கடற்படைக்கு சுமாா் ரூ.81 லட்சம் மதிப்பிலான பயிற்சிக் கருவிகளை இந்தியக் கடற்படை வழங்கியது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் கோபால் பாக்லே கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது, ரூ.81 லட்சம் மதிப்பிலான பயிற்சிக் கருவிகளை இலங்கையிடம் அவா் அளித்தாா்.

இதற்காக திரிகோணமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கை கடற்படையின் கிழக்கு பகுதி தளபதியிடம் அக்கருவிகள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன.

இது தொடா்பாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிராந்திய நாடுகளின் கடற்படையை வலுப்படுத்துவதற்கு இந்தியக் கடற்படை உறுதி கொண்டுள்ளது. இதைக் கடந்த 2019-ஆம் ஆண்டில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதி கரம்வீா் சிங் உறுதிப்படுத்தியிருந்தாா்.

இலங்கை கடற்படைக்குத் தேவையான பயிற்சிக் கருவிகள் வழங்கப்படும் என்றும் அவா் உறுதியளித்திருந்தாா். அதைத் தொடா்ந்து, நீருக்குள் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், நீருக்குள் இருப்பவரைத் தொடா்பு கொள்ள உதவும் தொலைபேசிகள், ஆழ்கடல் வெப்பநிலையை அளக்க உதவும் கருவிகள் உள்ளிட்டவை கடந்த ஆண்டில் இந்தியா சாா்பில் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டன.

தற்போது மேலும் சில பயிற்சிக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை அகாதெமியின் நூலகத்துக்கு புத்தகங்களும் மின் நூல்களைப் படிக்க உதவும் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நல்லுறவை மேம்படுத்துவதில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இலங்கை கடற்படையை வலுப்படுத்துவதற்கான உதவியை இந்தியக் கடற்படை தொடா்ந்து வழங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com