மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங் தாக்கு

மேற்கு வங்கத்தில் இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்துள்ள மம்தா பானர்ஜியால் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: ராஜ்நாத் சிங் தாக்கு

மேற்கு வங்கத்தில் இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்துள்ள மம்தா பானர்ஜியால் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
 மேலும், 200க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 மேற்கு வங்கம், மிதுனபுரி மாவட்டம், தாஸ்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
 மேற்கு வங்கத்தில் நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்காக, மத்திய பட்ஜெட்டில் ரூ.25ஆயிரம் கோடியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது. அந்த நிதியில்தான் மாநிலத்தில் தற்போது சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழைகள் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு மத்திய அரசு வழங்கிய நலத்திட்டங்களை மம்தா அரசு சரிவர செயல்படுத்தவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு வழங்கப்படும்.
 அரசியல் வன்முறையில் பாஜக தொண்டர்கள் 200 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளனர். 2,000 பேரை காணவில்லை. இது குறித்து முதல்வர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
 இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்துள்ள மம்தா பானர்ஜி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.
 அவரால் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை. அதேநேரத்தில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதி நிலவுகிறது.
 மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதன் பிறகு வளர்ச்சிக்கும், அமைதிக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.
 கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 42 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 18 இடங்களில் வெற்றி பெற்றது.
 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய சவாலாக பாஜக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com