
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுக்களை நிராகரித்தது தொடர்பாக பாஜக வேட்பாளர்கள் இருவர் கேரள உய்ரநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கேரள சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. அதில், கண்ணூா் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாவட்டத் தலைவா் என்.ஹரிதாஸின் வேட்புமனுவும் திருச்சூா் மாவட்டத்தில் உள்ள குருவாயூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில மகளிா் பிரிவு தலைவரான நிவேதிதாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.
தங்கள் வேட்புமனுக்களில் இருந்த சிறு தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை மாவட்ட தோ்தல் அதிகாரி நிராகரித்துவிட்டதாக இருவரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாட இருப்பதாக கூறியதாக பாஜக வேட்பாளர்கள் தற்போது கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
விரைவில் கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.
140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...