
கேரளத்தில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 44,675 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11.04 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 13 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,495ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று 2,251 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,74,805ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 24,620 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,28,237 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
352 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...