அரசியல் ஆலோசகர் பணியிலிருந்து விலகுகிறார் பிரஷாந்த் கிஷோர்!

பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஐபேக் நிறுவனத்தில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். 
பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர்
Updated on
1 min read

பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஐபேக் நிறுவனத்தில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். 

ஐபேக் நிறுவனத்தின் தலைவரும் பிரபல அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வியூகம் வகுத்து கொடுத்தார். 

இதையடுத்து தில்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோருக்கு பணியாற்றினார். பிகாரில் நிதீஷ் குமாருடன் இணைந்து பணியாற்றினார்.

தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழகத்தில் திமுகவுக்கும் பணியாற்றினார். இந்த இரு கட்சிகளுமே அந்தந்த மாநிலங்களில் முன்னிலையில் உள்ளன. 

இந்நிலையில், பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஐபேக் நிறுவனத்தில் இருந்து விலகப் போவதாகவும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடப்போவதாகவும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில் ஐபேக் பணிகளை தனது ஊழியர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். 

பிரஷாந்த் கிஷோர், தமிழகத்தில் திமுக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்கத்தில் பாஜக ஒரு இலக்கத்தைக்கூட தாண்டாது என்றும்  கூறியிருந்தார். 

இந்த இரண்டுக்கும் முரணான முடிவுகள் வந்துகொண்டிருப்பதால் அவர் இவ்வாறு முடிவு எடுத்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com