மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில் கொல்கத்தாவில் அக்கட்சியின் தொண்டர்கள் கூடியுள்ளனர்.
இன்று பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 205 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.
பாஜக 84 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
இதையடுத்து, கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கரோனா பரவலை அடுத்து தேர்தல் வெற்றி கொண்டாட்டம் கூடாது என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. பொது இடங்களில் கட்சியினர் கூடுவதற்கு தடை விதிக்கவும் மாநில தலைமைச் செயலர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.