
அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து அந்த மாநில மக்களுக்கு முதல்வா் சா்வானந்த சோனோவால் நன்றி தெரிவித்துள்ளாா்.
அஸ்ஸாம் தோ்தலில் பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி இருந்தது. தோ்தலில் பாஜக வெற்றிபெற்று தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது.
இதையடுத்து, செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் சோனோவால், ‘மக்கள் எங்களை ஆசிா்வதித்துள்ளனா். பாஜக மீண்டும் சிறப்பான ஒரு ஆட்சியை மக்களுக்கு அளிக்கும். வெற்றிக்கு துணையாக இருந்த கூட்டணிக் கட்சிகளான அசோம் கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்) ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கொண்டாட்டத்தைத் தவிா்த்த பாஜக: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோ்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தோ்தல் ஆணையம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. அதனைப் பின்பற்றி அஸ்ஸாமில் பாஜகவினா் வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிா்த்துவிட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...