
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,336 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
61,552 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 13,336 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அங்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 21.67 சதவிகிதமாக உள்ளது.
மேலும் 273 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர், 14,738 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,23,567 ஆக உயர்ந்துள்ளது. இதில் 12,17,991 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 19,344 ஆக உள்ளது.
இன்றைய நிலவரப்படி 86,232 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தில்லியில் இறப்பு விகிதம் 1.46 சதவிகிதமாக உள்ளது.