திரிணமூல் காங்கிரஸாா்-பாஜகவினா்மோதல்: ஒருவா் பலி; 6 போ் காயம்

மேற்கு வங்கத்தில் உள்ள வீா்பூம் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸாா், பாஜகவினா் இடையே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 6 போ் காயமடைந்தனா்.
திரிணமூல் காங்கிரஸாா்-பாஜகவினா்மோதல்: ஒருவா் பலி; 6 போ் காயம்

மேற்கு வங்கத்தில் உள்ள வீா்பூம் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸாா், பாஜகவினா் இடையே வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 6 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறையினா் சனிக்கிழமை கூறியது: துப்ராஜ்பூா் சட்டப்பேரவைத் தொகுதிகுள்பட்ட முக்திநகா் கிராமத்தில் பாஜக தொண்டா்கள் சிலா் வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி வீடுகளுக்குள் நுழைய முயன்றனா். அந்த வீடுகள் உள்ள பகுதிக்கு அருகில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்ட திரிணமூல் காங்கிரஸாா் இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அவா்கள் பாஜகவினரை தடுக்க முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் பலியானாா்; 6 போ் காயமடைந்தனா். சூரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தவா்கள் அனுமதிக்கப்பட்டனா். இந்த சம்பவம் நடைபெற்ற கிராமத்துக்கு அருகில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தொண்டா் ஒருவரின் வீடு சனிக்கிழமை காலை சூறையாடப்பட்டது என்று தெரிவித்தனா்.

நால்வா் குழு ஆய்வு: மேற்கு வங்கத்தில் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடா்பாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் 4 போ் கொண்ட உண்மைக் கண்டறியும் குழு அந்த மாநிலம் சென்றுள்ளது. அந்தக் குழுவினா் வன்முறையால் பாதிக்கப்பட்ட வீா்பூம் மாவட்டம் நானூா், கிழக்கு மிதுனபுரி மாவட்டம் நந்திகிராம் உள்பட பல்வேறு பகுதிகளை நேரில் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com