
நாட்டில் இதுவரை 17.72 கோடி பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத் துறை
நாட்டில் இதுவரை 17.72 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் இது தொடர்பாக பேசிய சுகாதாரத் துறை இணை செயலர் லாவ் அகர்வால், முதல் தவணையாக 13.76 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்ட தவணையாக 3.96 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் இதுவரை மொத்தமாக 17.72 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் முன்களப் பணியாளர்களுக்கு 2.22 கோடியும், சுகாதாரப் பணியாளர்களுக்கு 1.62 கோடியும், 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு 13.53 கோடியும், 18 முதல் 44 வயதிற்குட்பட்டோருக்கு 34.81 கோடி கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.